தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர், அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ளது, இதேபோன்று திருவள்ளூரில் உள்ள திரையரங்கத்தில் 13-ம் தேதி பீஸ்ட் திரைப்படமானது திரையிடப்பட உள்ளது, இந்த நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்கத்தில் அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை விட கூடுதலாக ரூ.1000 வைத்து கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்வதாகவும், ரசிகர் மன்றத்துக்கு டிக்கெட்டுகள் வழங்காததை கண்டித்து ஆவடி செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment