ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஜான், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதியிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் வரி ஏற்றத்தை பரிசீலனை செய்யவேண்டும். மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவுக்கு வரி விததிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில். ஆவடி மாநகராட்சி முதல் கூட்டத் தொடர் மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அதன்படி குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி மற்றும் காலிமனை வரி உயர்த்தப்பட்டது.
இதையடுத்து ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. வரி சம்பந்தமான கூட்டத்தொடருக்கு திமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் வரும் 13ம் தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என அறிவிப்பு, திருத்தி அமைக்கப்பட்ட வரிவிதிப்பு 30.6.2022 முதல் நடைமுறைக்கு வரும் என ஆவடி ஆணையர் சரஸ்வதி கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், `ஆவடி மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக வரிவசூல் செய்யவில்லை. நான் மேயராக பொறுப்பேற்ற 1 மாத காலத்தில் 4 கோடியே 94 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நிலுவையில் உள்ள 31.5 கோடி ரூபாய் இரண்டு மாத காலத்தில் வசூல் செய்யப்படும்' என தெரிவித்தார்
No comments:
Post a Comment