ஆவடி மாநகராட்சியில் ரூ.2.5 கோடியில் அறிவுசார் மைய கட்டிடம்: அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 April 2022

ஆவடி மாநகராட்சியில் ரூ.2.5 கோடியில் அறிவுசார் மைய கட்டிடம்: அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அருகே ரூ.2.5 கோடி மதிப்பிலான அறிவுசார் மைய கட்டிடத்தை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு மூலம் ஆவடி மாநகராட்சிக்கு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் அறிவுசார் மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஆவடி அருகே இந்து கல்லூரியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக அறிவுசார் மையம் கட்டிடம் ரூ.2.5 கோடியில் அமைகப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்தார். அப்போது அவர் பேசுகையில், `ஆவடியில் விளையாட்டு அரங்கம் விரைவில் தொடங்கப்படும்' என்றார். 


இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகர ஆணையர் சரஸ்வதி, ஆவடி மாநகர செயலாளர் நாராயண பிரசாத், 4வது மண்டல குழுத்தலைவர் ஜோதி லட்சுமி, நாராயண பிரசாத், 14வது நகரமன்ற உறுப்பினர் ராஜேஷ், மாமன்ற உறுப்பினர் மற்றும் வட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad