வெள்ளவேடு ஊராட்சியில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிடங்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 April 2022

வெள்ளவேடு ஊராட்சியில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிடங்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

பூந்தமல்லி ஒன்றியம் வெள்ளவேடு ஊராட்சியில் ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, ரூ.20.38 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள், ரூ.26.8 லட்சம் மதிப்பீட்டில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என மொத்தம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.


இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் ஜி.துர்கா கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு முன்னிலை வகித்தார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார்.


இதில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் சத்யபிரியா முரளிகிருஷ்ணன், என்.பி.மாரிமுத்து, சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், பொற்செல்வி, துணைத் தலைவர் கே.கன்னியப்பன், திமுக ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சுமதி விஜயகுமார், கு.ச.கதிரவன், கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், சுரேஷ்குமார், மோகன், ஜி.சி.சி.கருணாநிதி, பிரதீப், ஆர்.செந்தாமரை, சாக்ரடீஸ், பரணிதரன், பிரவீன்குமார், ராஜேஷ் சர்மன்ராஜ், சுகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad