திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி டாக்டர் வி . கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி கற்பதின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை பள்ளியின் சேர்மன் வாசுதேவ நாயுடு கொடியசைத்து துவக்கி வைத்தார் இப்பேரணியானது பொன்னேரி பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை வழியாக பள்ளியை சென்றடைந்தது.
இதில் கல்வி அழியாத செல்வம், கல்வியே மனிதனை உயர்த்தும், இருளை அகற்றி வாழ்வில் ஒளியை தரும், கல்வி பேராயுதம், உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில பதாகைகள் ஏந்திய படி ஊர்வலமாக சென்று பள்ளியை வந்தடைந்தது மாணவர்களின் பாதுகாப்பிற்காக போக்குவரத்து காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பின்னர் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, பேரணியில் செயலாளர் ராஜசேகர் துணை செயலாளர் தாரக ராம்,பள்ளி குழு உறுப்பினர் ஈஸ்வரராவ் ,தலைமை ஆசிரியர் கனகவல்லி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment