சென்னையிலிருந்து பொன்னேரி கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்க அலுவலர் கண்ணன் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு மற்றும் ஊழியர்கள் மின்சார ரயில் சோதனை செய்தனர்.
அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து புறப்பட்ட ரயிலில் பொன்னேரி ரயில் நிலையத்தில் வட்ட வழங்கல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகள் இருக்கையில் கீழ் பைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் பொன்னேரி ரயில் நிலைய இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட. ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எடை போட்ட போது 1413கிலோ இருப்பது தெரிய வந்தது அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தில் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment