தண்டையார்பேட்டையில் பள்ளி மாணவனை தெரு நாய் கடித்து குதறியது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மாணவனின் தாய் கோரிக்கை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 July 2024

தண்டையார்பேட்டையில் பள்ளி மாணவனை தெரு நாய் கடித்து குதறியது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மாணவனின் தாய் கோரிக்கை.


சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் செனி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி சமையல் வேலை செய்து வருகிறார் இவரது மகன் கௌரிநாத் வயது 8 அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான் நேற்று முன்தினம் கௌரிநாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று திடீரென மாணவன் கௌரிநாத் மீது பாய்ந்து மாணவனின் இடது கை தோள்பட்டை பகுதியில் கடித்து பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது வலியால் துடித்த மாணவனை தாயார் தனலட்சுமி அதே பகுதியில் உள்ள சின்ன ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு நாய் கடிக்கு மருந்து இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டதாக தெரிகிறது, இதனை அடுத்து ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் சென்று அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர் இதனை அடுத்து நாய் கடிக்கு வைத்தியம் பார்க்கப்பட்டு மாணவன்  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ள நிலையில் தாயார் தனலட்சுமி சென்னை முழுவதும் தெரு நாய்கள் ஆங்காங்கே சிறுவர்களை கடித்து வருகிறது.


இந்நிலையில் எனது மகன் கௌரிநாத் மற்றும் அதே பகுதியில் உள்ள மற்றொருவரையும் நாய் கடித்து உள்ளதாகவும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நாய் கடிக்கு மருந்து வைத்துக் கொள்ள வேண்டும் மாநகராட்சி சார்பில் வெறி பிடித்த தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மேலும் அதே பகுதியில் மீண்டும் ஒரு பெண்மணி சுற்றி தெரியும் நாய்களுக்கு சோறு வைத்து வளர்த்து வருகிறார்கள்.


இதனால் ஆங்காங்கே சிறுவர்கள் பயத்துடன் சென்று வருகிறார்கள் உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டி சிறுவனின் தாயார் கோரிக்கை.

No comments:

Post a Comment

Post Top Ad