அவர்கள் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளுக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் நடந்து ஏரியை கடந்து பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர் அங்குள்ள தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு காணப்படும் போது தரை பாலத்தை கடந்து செல்ல முடியாமல் படகில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது இதை அடுத்து பழவேற்காடு பசியாவரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இதைத்தொடர்ந்து சுமார் 20 கோடி மதிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பால பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மேம்பால பணிகள் முழுதும் நிறைவு பெற்றுள்ளன இதனால் அப்பகுதி மக்கள் வருகின்ற மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க வேண்டும் எனவும் வேபாலத்தில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலசந்தரிடம் கேட்டபோது பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள மேம்பால பணிகள் முழுவதும் நிறைவற்ற நிலையில் பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment