காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 June 2024

காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி


மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்தின் அடர்ந்த காடு இயற்கையாகவே உள்ளது. இந்த காட்டில் இருந்து அடிக்கடி புள்ளிமான்கள் குடிநீருக்காக வெளியேறும் இந்நிலையில் துறைமுக சாலையை கடக்கும் போது புள்ளிமான் ஒன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியாகி இருந்தது. 

மீஞ்சூர் ரோந்து பணி போலீசருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த புள்ளிமானை கைப்பற்றிய நிலையில் வனதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மானின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு புதைக்கப்பட்டது. இச்சம்பவம் காட்டுப்பள்ளி துறைமுகம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad