பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஞாயிறு குறுவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 June 2024

பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஞாயிறு குறுவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஞாயிறு குறுவட்டப் பகுதிகளான பெரிய முல்லை வாயல் மற்றும் புதுப்பாக்கம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதை வட்டாட்சியரின் உத்தரவின் பெயரில் அகற்றும் பணிகள் நடைபெற்றது.


பொியமுல்லைவாயல் கிராமம், புல எண் 139,  வண்டிப்பாதை வகைப்பாடு கொண்ட  மொத்தப்பரப்பு 0.19.00 ஏா்ஸில் 0.04.00 ஏா்ஸ் நிலத்தில் மட்டும் சுமார் தற்காலிக மார்கெட் மதிப்பு  ரூ.50,00,000 மதிப்புள்ள நிலத்தில் வேலி போட்டு ஆக்கிரமணம் செய்துள்ளதையும்,புதுப்பாக்கம் கிராமம்,புல எண் 144,வண்டிப்பாதை வகைப்பாடு கொண்ட  மொத்தப்பரப்பு 0.07.00 ஏா்ஸில் 0.03.00 ஏா்ஸ் நிலத்தில் மட்டும் சுமார் தற்காலிக மார்கெட் மதிப்பு  ரூ.80,00,000 மதிப்புள்ள நிலத்தில் வேலி போட்டு ஆக்கிரமணம் செய்துள்ளதையும் ஞாயிறு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பி. பெருமாள், புதுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஐஸ்வர்யா லட்சுமி,பொியமுல்லைவாயல் கிராம நிர்வாக அலுவலர் மதன்ராஜ் ஆகியோா்களால் ஆக்ரமணம் அகற்றப்பட்டது. 


ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேலிகள், தடுப்புகள், மடைகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெயர் பலகை வைக்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad