வெயிலிலும் மழையிலும் அவதிப்படும் மீஞ்சூர் லட்சுமிபுரம் நியாய விலைக்கடைக்கு வரும் பொதுமக்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 June 2024

வெயிலிலும் மழையிலும் அவதிப்படும் மீஞ்சூர் லட்சுமிபுரம் நியாய விலைக்கடைக்கு வரும் பொதுமக்கள்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 13ஆம் வார்டில் அமைந்துள்ளது லட்சுமிபுரம் நியாய விலை கடை. இந்த நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் பொருட்களை வாங்க வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. 


இந்த நியாய விலை கடைக்கு நிழற்குடை (பந்தல்) இல்லாததால் முதியோர்களும் பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இது குறித்து பலமுறை  அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 


மேலும் இந்த நியாய விலை கடையின் மேற்கூரை பழுதடைந்து பல வருடங்கள் ஆகுகின்றன. இதுவரை நிரந்தரமாக சரி செய்யாமல் தற்காலிகமாக தார்ப்பாய் கட்டி வருகின்றன. இதனால் விநியோகிதத்திற்கு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் பாழாகி வருவதாக சொல்லப்படுகிறது. 


இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சரி செய்தும், பொதுமக்கள் நிழலில் நிற்கும் வண்ணம் நிரந்தர மேற்கூறை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad