செங்குன்றம் அருகே தனியார் இரசாயன கிடங்கில் தடை செய்யப்பட்ட மெத்தனால் கலவையுடன் இருந்த 1500லிட்டர் ரசாயனம் பறிமுதல். 4பேரிடம் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 23 June 2024

செங்குன்றம் அருகே தனியார் இரசாயன கிடங்கில் தடை செய்யப்பட்ட மெத்தனால் கலவையுடன் இருந்த 1500லிட்டர் ரசாயனம் பறிமுதல். 4பேரிடம் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50ககும் மேற்பட்டோர் உயிரிழந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மெத்தனால் விற்பனையாளர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பக்கம் பகுதிகளில் உள்ள தனியார் கெமிக்கல்ஸ் குடோன்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒரு கிடங்கில் பூட்டை அறுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் இரசாயன பொருட்கள் பேரல் பேரலாக இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் மெத்தனால் கலவையுடன் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக இரசாயன கலவை என கூறியுள்ளனர். இதையடுத்து சுமார் 1500லிட்டர் மெத்தனால் கலவையுடன் இருந்த ரசாயனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும் பரிசோதனைக்காக ஆய்வகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


பறிமுதல் செய்யப்பட்ட இரசாயன பொருட்களில் உள்ள மெத்தனால் வீரியம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட கொருக்குபேட்டையை சேர்ந்த கெளதம், மலையனூர் சேர்ந்த பரமசிவம், ராம்குமார், மாதவரம் சேர்ந்த பென்சிலால் ஆகிய 4பேரிடம் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கள்ளச்சாராய மூல பொருளான மெத்தனால் விவகாரத்தில் கைதான மாதேஷ் என்பவருடன் தொடர்புள்ளதா யாருக்கெல்லாம் இரசாயன பொருட்களை விற்பனை செய்துள்ளார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad