கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி 12லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5பேருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 June 2024

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் கத்தியை காட்டி 12லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5பேருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.


கும்மிடிப்பூண்டி  அடுத்த புதுவாயல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான திருச்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு கடையின் விற்பனை பணம் ரூ. 12லட்சத்தை எடுத்து கொண்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி வழியே ராகவரெட்டிமேடு பகுதிக்கு செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் வந்த 5பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி கத்தியை காட்டி மிரட்டி 12லட்சம் பணத்தை வழிப்பறி செய்து தப்பி சென்றது. 

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து  சோழவரம் அருண் புழல் பக்ருதீன் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த , ஜெய்சீலன், அருண் மதன்குமார் , ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த நிலையில் . வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு  வழக்கறிஞர் பல்லவன் வாதாடி குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றவாளிகளுக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad