திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கன்னிகைப்பேர் பஜார் வீதியில் தெருமுனை கூட்டம் மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் கா.குமார் தலைமையில் நடைபெற்றது.
எல்லாபுரம் ஒன்றிய பொது செயலாளர் பி.நாகஅரசு, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எஸ்.மதுரைவீரன், ஒன்றிய துணை தலைவர்.ஜி.மணிக்கண்டன், ஒன்றிய செயலாளர் ஏமுலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் கே.பழனி, வரவேற்புரை ஆற்றினார்.
இந்த தெருமுனை கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்து முன்னணி மாநில பொது செயலாளர், சி. பரமேஸ்வரன், காஞ்சி கோட்டம் செயலாளர் சு.சத்தியமூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ. பச்சையப்பன், ஆன்மீக பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
எல்லாபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் டி.தென்னரசு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
No comments:
Post a Comment