ஆவடி - தடம் புரண்ட ரயில், கவனகுறைவால் ஏற்பட்ட விபரீதம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 October 2023

ஆவடி - தடம் புரண்ட ரயில், கவனகுறைவால் ஏற்பட்ட விபரீதம்.

சென்னை, அண்ணனூர் இரயில் தொழில்பேட்டையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மூன்றாவது நடைமேடைக்கு அதிகாலை சுமார் 5.40 மணி அளவில் வந்து ஆவடியில் இருந்து மீண்டும் சென்னை பீச் மார்க்கமாக செல்ல வேண்டிய மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.


அந்த ரயிலை நடைமேடையில் நிறுத்தாமல் அரக்கோணம் மார்க்கமாக ஓட்டுநர் கவனக்குறைவாக இயக்கியுள்ளார். அதில் மின்சார இரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் திருத்தணி மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து இரயில் சேவைகளும் தாமதமாக புறப்படுகின்றன இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து துரிதமாக செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad