வடமதுரை பெரியகாலணி அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 October 2023

வடமதுரை பெரியகாலணி அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வடமதுரை கிராம பெரிய காலணியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக இன்று தொடங்கியது.


முதல் நிகழ்ச்சியாக காலை  7.30 மணி அளவில் கணபதிஹோமம்  பந்தக்கால் நடுதல் காப்பு கட்டுதல் தனபூஜை. கோபூஜை மற்றும் கரிகால வீதி உலா நடைபெற்றது பகல் 11 மணி அளவில் யோகா சாலை நிர்மாணம் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணிய வாசனம் ஹோமம். வாஸ்து சாந்தி ஹோமம் கிராம தேவதை சார்ந்த ஹோமம் ஆகிய ஹோமங்கள்  நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகளை கண்டு களித்து  சாமி தரிசனம் செய்தனர்.
 

- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி

 

No comments:

Post a Comment

Post Top Ad