திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கினை அடைய வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.
இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாவட்ட ஊராட்சி தலைவர் / திட்டக்குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, தலைவர் பிரபாகரன், கவுன்சிலர் குணா தயாநிதி, மாவட்ட கவுன்சிலர் மு. சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மரு.தி .சி.செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் (மாநில காசநோய்) மரு.ஆஷா பெட்ரிக், இணை இயக்குநர்கள் மரு.சி.சேகர் (சுகாதாரப் பணிகள்), மரு. ப.சம்பத் (தொற்று நோய்), மரு.லட்சுமி முரளி (காசநோய்), துணை இயக்குநர்கள் மரு.ஜவஹர்லால் (சுகாதாரப் பணிகள்), மரு.செந்தில்குமார் (சுகாதாரப் பணிகள்), மரு.சங்கீதா(காசநோய்), திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.திலகவதி, வில்லிவாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் ப. கிரிஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment