நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.பி சிவாஜி, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பி.ஜே. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இலவச சேவைகளையும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியும் துவக்கி வைத்தார் ஆலயத்தின் சார்பில் வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏவி. ராமமூர்த்தி, இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என். கிருஷ்ணமூர்த்தி, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி விபி. ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி. லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், துணை அமைப்பாளர் வடமதுரை அப்புன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடும் 512 பேருக்கு பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஆலயத்தின் சார்பில் ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் கலந்து கொண்டு சமபந்தி விருந்தை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் சிறப்பு வழிபாடுகளும் புது விருந்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
No comments:
Post a Comment