
பின்னர் அங்கிருந்து அரும்பாக்கம் கிராமப் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போது தலா 2 யூனிட் அளவு கொண்ட சவுடு மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த 4 லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரியில் அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.அரும்பாக்கம் கிராமத்தில் அனுமதி இன்றி சவுடு மண் குவாரி நடத்துவதாகவும்,அங்கிருந்து சவுடு மண் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.
எனவே,போலீசார் சவுடுமண் குவாரியில் இருந்த ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் நான்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக சவுடுமண் குவாரி நடத்திய வெற்றிவேல், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் கீழானூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், லாரி உரிமையாளர்களான வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, திருநின்றவூரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில் சவுட்டுமண் குவாரிக்கு எடுப்பதாக கூறி அனுமதி பெற்று பகலெல்லாம் சவுண்ட் எடுப்பதாகவும் அரசு அனுமதித்த இடம் மட்டுமல்லாமல் அனுமதி இல்லாத இடத்திலும் மண் எடுப்பதாகவும், இதன் பயன்படுத்தி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் பகுதியில் ஆற்று மணலும் கடந்து வருவதாகவும். எனவே இதுபோன்று சட்டவிரோதமாக மண் எடுப்பவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டும்தான் நீர் பழங்களை காப்பாற்ற முடியும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment