பழங்குடி இன பெண்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாய் வீட்டு சீதனமாக புத்தாடைகளை வழங்கிய தன்னார்வு அமைப்பினர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

பழங்குடி இன பெண்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாய் வீட்டு சீதனமாக புத்தாடைகளை வழங்கிய தன்னார்வு அமைப்பினர்.


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டையில்  இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது,  அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா தலைமையில், நிர்வாக இயக்குனர் பிரியா ஏற்பாட்டில், கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிப்பாலையம் கிராமத்தில் சுமார் 36 பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர், இந்த குடும்பங்களைச் சார்ந்த 36.பெண்களுக்கு  பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு உதவிடும் வகையில் தாய் வீட்டு சீதனமாக புடவை. மஞ்சள், குங்குமம், பழம், உள்ளிட்டவை நலத்திட்ட உதவி  அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா வழங்கினார். 


இந்தப் பொருட்களை பெற்றுக் கொண்ட பகுதியின் பெண்கள் நளினி மாயாவிற்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் இதில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜகோபால் சுவாமி ரகு,காமராஜ், தேவராஜ், நாகராஜ், குமரன் ஏழுமலை நந்தகுமார், ஜெய்சங்கர், தேவதாஷ், கார்த்திக் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த  அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா 32 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் தடா என்கின்ற பகுதியில் துல்காத் அம்மன் ஆலயம் ஒன்றை நிறுவி அதன் மூலமாக பல்வேறு சேவைகளையும் செய்து வருவதோடு பசில் வாடும்  ஏழை மக்களுக்கும் ஒவ்வொரு பௌர்ணமி அன்று ஆலயத்தில் சிறப்பு பூஜையோடு 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் சேவைகளை செய்து வருகின்றனர்.


இதனை அடுத்து அறக்கட்டளையை நிறுவி இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்று அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் விதவை தாய்மார்களுக்கு முதியோர்களுக்கு  பள்ளி மாணவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றார்.  

No comments:

Post a Comment

Post Top Ad