பெரியபாளையம் அருகே கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

பெரியபாளையம் அருகே கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம்.


பெரியபாளையம் அருகே கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம். அதிகாரிகள் மெத்தனப்போக்கால் 300ஏக்கர் நெற்கதிர்கள் பாழாகும் நிலை என விவசாயிகள் குற்றச்சாட்டு.


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட எம்.என்.சத்திரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு எதிர்பார்த்தபடி பருவ மழை பெய்ததால் நெற்பயிரில் செழுமையாக வளர்ந்து கதிர்முற்றி அறுவடையான தயார் நிலையில் உள்ளன. ஆரணியாற்றில் இந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அவ்வப்போது ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆரணியாற்றில் இருந்து பனஞ்சேரி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 



ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் முறையாக தூர் வாராமல் கிடப்பதால் ஆற்றில் இருந்து திருப்பி விடப்படும் தண்ணீர் கால்வாயில் இருந்து வெளியேறி வயலில் தஞ்சமடைந்துள்ளது. நெற்பயிர்கள் அனைத்தும் கதிர்முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சூழலில் தற்போது வயல்வெளிகளில் முழுமையாக தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 



இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏரிகளுக்கு செல்ல கூடிய நீர்வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் ஏரிக்கு செல்ல வேண்டிய நீர் அனைத்தும் வயல்வெளியில் தேங்கி நெற்பயிர்களை மூழ்கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 



முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் ஆற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திருப்பி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், அதிகாரிகள் மெத்தனப்போக்கு காரணமாக தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள 300ஏக்கர் நெற்பயிர்கள் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 



உடனடியாக நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் எனவும், வயல்வெளியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாயையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad