திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே வயலாநல்லூர் என்ற கிராமத்தில் உள்ள குளக்கரை அருகே துர்நாற்றம் வீசியதால், அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது திருநங்கை ஒருவரது பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து வெள்ளவேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இறந்த திருநங்கை யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. ஆனால் அவரது முகம் சிதைந்து உடல் அழுகிய நிலையிலும் காணப்பட்டிருக்கிறது.
இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து சென்றது தெரியவந்தது. மேலும் இறந்த திருநங்கை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment