இந்த புதுமை கருத்து தனியார் துறையின் பல அலுவலகங்களில் பொதுவான நடைமுறையாகும். மதிய உணவு அருந்தும் அறை சுமார் 911 சதுர அடி கொண்டது. இவற்றில் மேஜைகள், நாற்காலிகள், தண்ணீர் வசதிகள் மற்றும் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பகுதி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இது வரை தங்கள் பணி செய்யும் மேசைகள் மற்றும் பிற பொதுவான பகுதிகளில் மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்தனர். சிறந்த பணிச்சூழல், அமரும் இடம், மற்றும் பணியிடத்தின் தூய்மையை, உறுதி செய்வதற்காக இது ஒரு பொது நல நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தினமும், சுமார் 150 ஊழியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவார்கள்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப இன்று (28.10.2022) மதிய உணவு அருந்தும் அறையை திறந்து வைத்தது பணியாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது..!
No comments:
Post a Comment