கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையின் குடிநீர் தேவைக்காக 5வது ஏரியாக கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் இருந்து வந்த கிருஷ்ணா நதிநீர்வரத்து மற்றும் தென் மேற்கு பருவ மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டி 100நாட்களாக முழு கொள்ளளவிலேயே நீடிக்கிறது.
ஏரிக்கு நேற்று 26 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 23 கன அடியாக சரிந்துள்ளது. ஏரி முழுமையாக நிரம்பியுள்ளதால் 100வது நாளாக ஏரியில் இருந்து 13 கனஅடி நீர் இங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய உபரி நீர் போக்கியான கலங்கல் வழியாக வழிந்தோடுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment