பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை சேவையை போற்றும் விதமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், கழிவறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு பயனாளிகளுக்கு சால்வை அணிவித்து பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார்.
இதையடுத்து பார்வையிட சென்ற இடத்தில் திமுகவை போன்று சுதாகர் ரெட்டி மற்றும் பாஜகவினர் பொதுமக்களை தரையில் அமர வைத்து மினி கிராமசபை கூட்டம் போல் நடத்திவிட்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார் மேலும் கொரோனா தடுப்பூசி, கொரோனா நிவாரண தொகை, ரேஷன் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு தருவதாகவும் திமுக அரசு ஏதும் கொடுப்பது இல்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் திமுக, காங்கிரஸ், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குடும்ப கட்சி என்றும் பாஜக மட்டுமே தேசிய கட்சி என்றும் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
.jpeg)
No comments:
Post a Comment