பூந்தமல்லியில், போலி போலீஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி, ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி, லட்சுமி புரம் மெயின்ரோடு, ராஜா தெருவை சேர்ந்தவர், தினகரன் (32) இவரது சொந்த ஊர் வேலுார் தினகரனின் மனைவி நிவேதா(26) இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே, சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை, தினகரன் தாக்கியுள்ளார். இது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் நிவேதா புகார் கொடுத்தார். விசாரணையில், ஓட்டுனரான தினகரன், போலீஸ் எனக்கூறி, நிவேதாவை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.
மேலும், போலி போலீஸ் அடையாள அட்டை வைத்துள்ள தினகரன், தான் போலீஸ் என்றும், ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாக கூறி வந்ததும் தெரியவந்தது. வேலை வாங்கி தருவதாக, பலரிடம் பணம் வாங்கி தினகரன் ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கிஉள்ளார். இதையடுத்து, பூந்தமல்லி போலீசார், தினகரனை கைது செய்தனர்.
No comments:
Post a Comment