சென்னை, பட்டாபிராம் அடுத்த தண்டுரையில் இருந்து, அணைக்கட்டுச்சேரி, சோராஞ்சேரி, ஆயிலச்சேரி, மேட்டுப்பாளையம், பாரிவாக்கம், திருவேற்காடு வழியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு, 'தடம் எண்: 53 எஸ்' என்ற சிற்றுந்து இயக்கப்பட்டது.மேலும், பட்டாபிராமில் இருந்து, அமுதுார் மேடு, வயலாநல்லுார், சொக்கநல்லுார், காவலச்சேரி, திருமழிசை, பூந்தமல்லி வழியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு, 'தடம் எண்: 153' என்ற பேருந்தும் இயக்கப்பட்டது.அவை, சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்திற்கு பெரிதும் உதவியது.
இந்நிலையில், 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகள், அதன் பின் இயக்கப்படவில்லை.இதனால், பட்டாபிராம் - பூந்தமல்லி மற்றும் கோயம்பேடிற்கு சென்று வர முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், இந்நிலையில், ஆவடியில் இருந்து பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி, சோராஞ்சேரி, ஆயிலச்சேரி, மேட்டுப்பாளையம், பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லி வரை செல்லும், 'எஸ்-45' என்ற வழித்தடத்தில், சிற்றுந்து இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment