சென்னை அருகே மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி ஏற்பாட்டில் பிரமாண்ட அரங்கங்கள் கொண்ட புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பதிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கலைஞர் கருணாநிதியின் படைப்புகளுக்கு என தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சா.மு நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சியில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்ட முதல் ஊராட்சி அயப்பாக்கம் என்றனர். இதன் மூலம் நூல் ஆசிரியர்கள் மற்றும் வாசகர்களை ஊக்கப்படுத்த முடியும் என்றனர். இதனை தொடர்ந்து ஏழை, எளிய பெண்கள் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மஞ்சள் பை தைக்க 10 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment