தியாகிகள் தமிழறிஞர்கள் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

தியாகிகள் தமிழறிஞர்கள் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்கள் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.


இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில், இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படங்கள் என 100 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கண்டுகளித்தனர். 


நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சந்தானலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, அலுவலக மேலாளர் (பொது) கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad