சென்னை அடுத்த அம்பத்தூர் பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி எண்பத்தி எட்டாவது வார்டு நாகவல்லி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு வண்ண வண்ண கோல போட்டி நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கலந்துகொண்டு பத்துக்கு மேற்பட்ட சாலைகளில் வடிவமைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண கோலங்களை பார்வையிட்டு மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்து முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் இரண்டாவது பரிசு 7 ஆயிரம் ரூபாய் மூன்றாவது பரிசு 5000 ரூபாய் வழங்கினார்.
அறநிலை துறை அமைச்சர் கொட்டும் மழை என்றும் பாராமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பெண் போட்டியாளர்களுக்கும் சில்வர் குடங்கள் ஆறுதல் பரிசாக வழங்கினர் இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் எம்டிஆர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment