திருவள்ளூரில் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆகியோர் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

திருவள்ளூரில் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆகியோர் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் 235 பேருந்துகளை ஆய்வு செய்யப்பட்டன, மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பேருந்துகளை திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற இந்த  ஆய்வில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் கலந்து கொண்டு வாகனங்களின் உரிமங்கள், ஓட்டுநா் உரிமங்கள், ஆவணங்கள், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள், முதலுதவி ஏற்பாடு உள்ளிட்ட 16 அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். 


இந்த ஆய்வின்போது ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து. வாகனங்கள் தீப்பற்றி எரிந்தால் தீயை கட்டுப்படுத்துவது குறித்து  தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது, மேலும் குறைபாடுகள் உள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் ஆய்வின்போது திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன், திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் பாஸ்கர், ஏடிஎஸ்பி ஜேசுதாஸ், வட்டாட்சியர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

Post Top Ad