திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் பொன்னேரி நகர மன்ற திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் மற்றும் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். பொன்னேரி நகர மன்றத் தலைவரும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினருமான டாக்டர் பரிமளம், விஸ்வநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன், சேலம் சுஜாதா, தமிழ் சாதிக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட ஒன்றிய நகர உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொன்னேரி நகரமன்ற தலைவரும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினருமான டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment