தலைவிரித்தாடும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

தலைவிரித்தாடும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்.


போதைப் பொருட்களை பயன்படுத்துவதன் தீமை குறித்து, தன்னந்தனியாக இருசக்கர வாகனத்தில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் இளைஞர் ஒருவர்.சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர், டி.ஆறுமுகம்.


இந்திய சமூக சேவை சங்கம் என்ற அமைப்பினை, 2015ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.தற்போது, இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும், சீரழித்து வரும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம், சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வீட்டில் இருந்து, போதை விழிப்புணர்வு பிரசாரத்தை, இருசக்கர பிரசாரத்தை துவக்கிய அவர், நேற்று, திருவள்ளூர் வந்தடைந்தார்.பஸ் நிலையம், ரயில் நிலையம், தேரடி, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


பிரசாரம் குறித்து, ஆறுமுகம் கூறியதாவது:கடந்த மார்ச், 2020 - 2022 வரை, இந்தியா முழுதும், மூன்று முறை, இருசக்கர வாகனத்தில், 'கொரோனா' விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டேன். வரும் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு தினம் வருகிறது. இதற்காக, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர், ஆறுமுகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad