கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு சுமார் 8 மணி அளவில் ரிலையன்ஸ் சாலையில் அசோக் லேலண்ட் டெக்னிக்கல் சென்டர் அருகில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது.


அதில் வந்த மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் அவர்களை கண்ணிமைக்கும்  நேரத்தில் சராமரியாக வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தலைவர் மனோகரன் அவர்களின் மனைவி குழந்தை கண்முன்னே நடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த ஊராட்சி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தலைவர் மனோகரன்அவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டது.


இதுகுறித்த தகவல் ஊராட்சி பொதுமக்களுக்கு கிடைத்ததும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு தலைவரின் கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பொன்னேரி நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மிக விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad