பூந்தமல்லி அருகே சித்திரை கத்திரி திருவிழா கோலாகலம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

பூந்தமல்லி அருகே சித்திரை கத்திரி திருவிழா கோலாகலம்.

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி ஸ்ரீஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும்.


இதையொட்டி, இந்தாண்டு ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் சித்திரை கத்திரி திருவிழா நேற்று நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. 


கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் கூழ்வார்த்தல், கும்பம் படைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பூந்தமல்லி, குமணன்சாவடி, மாங்காடு, காட்டுப்பாக்கம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad