ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.

டீம் எவரெஸ்ட் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆயிரம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள wings atena அரங்கில் இன்று நடைபெற்றது


“டீம் எவரெஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் சென்னை கோயம்புத்தூர் மதுரை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் நான்தான் மாற்றம் என்ற கல்வி உதவித்தொகை திட்டம் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் இல்லாத அல்லது தாயோ தந்தையோ இழந்த மாணவர்களுக்கு கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர இந்நிறுவனம் சார்பில் I AM THE CHANGE ஸ்காலர்ஷிப் எனும் கல்வி உதவி தொகை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து மாணவ மாணவியர்களுக்கு அதற்கான சான்றிதழும் புத்தக பையும் வழங்கப்பட்டது.

 

இந்நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில் 1850 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளது மாணவர்கள் கல்வியை தொடர்ந்து முடிக்க ஆண்டுக்கு 30 ஆயிரம் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது அனைத்து மாணவர்களும் தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு மாணவரையாவது பட்டதாரி ஆவதற்கு  படிக்க வைப்பதாக உறுதி ஏற்கிறார்கள் அதனாலதான் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு நான்தான் மாற்றம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad