திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஜனனி(11), பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாகவும் அப்போது அவரது தாய் சரண்யா படிக்காமல் ஏன் வரைபடம் வரைகிறாய் என திட்டியதால் மனமுடைந்த ஜனனி வீட்டில் உள்ள புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி ஈடுபட்டபோது அவரை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து திருவேற்காடு போலீசார் இறந்து போன ஜனனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர் தாய் கண்டித்ததால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment