சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றது.
ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் கடந்த 25-ந் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 1.621 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 114 வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மூலம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது, இதேபோல் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்து பிளாஸ்டிக் மாசு இல்லாத திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment