கார் தீப்பற்றி எரிந்து விபத்து கணவன் மனைவி உயிர்தப்பினர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

கார் தீப்பற்றி எரிந்து விபத்து கணவன் மனைவி உயிர்தப்பினர்.

திருத்தணி, சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). இவரது மனைவி ஆஷா (40). இவர்கள் திருவள்ளூர் வந்து விட்டு மீண்டும் திருத்தணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் புதூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமாரும், ஆஷாவும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் கனகம்மா சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காரில் தீப்பற்றியதும் உடனடியாக இறங்கியதால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad