50 ரூபாய் சாலையில் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டி கொண்டு ஓடிய மர்ம நபர் - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

50 ரூபாய் சாலையில் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டி கொண்டு ஓடிய மர்ம நபர்

திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூர் அருகே பில்டிங் காண்டிராக்டரிடம் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநின்றவூர் அடுத்த அம்பிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். பில்டிங் காண்ட்ராக்டரான இவர், வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.


அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சாலையில் திரும்ப முயன்ற போது, அவரது பணம் கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் கிடந்த 5 பத்து ரூபாய் நோட்டுகளை எடுக்க சென்ற போது, வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.


இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad