பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த 3 குடோன்களுக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த 3 குடோன்களுக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து வைத்து தரம் பிரிக்கும் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இங்கு இருந்த பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 


தீ விபத்தின் காரணமாக அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கரும்புகை விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறிய நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தீயானது அடுத்தடுத்த 3 குடோன்களுக்கும் பரவியது.இதனால் அடுத்தடுத்த மூன்று குடோன்களும் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீயை அணைக்க அந்த பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 


தீ விபத்து குறித்து தகவலறிந்த அம்பத்தூர் துனை கமிஷனர் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். உரிய அனுமதி இல்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் அதிக அளவில் பழைய பொருட்களை தரம் பிரிக்கும் குடோன் செயல்பட்டு வந்ததால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad