திருவள்ளுர் மாவட்டம், செங்குன்றம் அருகே நேற்று காலை மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஊழியர் பரிதாபமாக பலியானார். செங்குன்றம் அருகே பொத்தூர், மேட்டு காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (42)
இவர், புழல் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேன் ஆக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை புழல், அம்பேத்கர் தெருவில் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, அதை சரி செய்ய முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment