ஆவடி விமானப்படை சார்பில் மோரை ஜெ.ஜெ நகர் பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

ஆவடி விமானப்படை சார்பில் மோரை ஜெ.ஜெ நகர் பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி  அடுத்த மோரை ஜே ஜே நகர் கிராமத்தில் சாட்டையடி தொழில் செய்யும்  பகுதி ஏழை எளிய மக்களுக்கு விமானப்படை படை சார்பில் AOC ஏர் கமாண்டர் சிவக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் தலைவர்  அவுவா  லோக்கல்,  திருமதி ஷீபா சிவகுமார், குரூப் கேப்டன், தலைமை நிர்வாக அதிகாரி பொற்செல்வன், மற்றும் விங் கமாண்டர் மருத்துவ உயர் அதிகாரி அனுபம் திமொதி,  ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள எழை எளிய மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில், ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை கிட்டப்பார்வை தூரப்பார்வை, மற்றும் பொது சிகிச்சைக்கான மருத்துவ மற்றும் மருந்து மாத்திரைகள் 200கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தை சார்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது.



இந்த சிறப்பு மருத்துவ முகாமை விமானப்படை  மருத்துவ குழு மருத்துவர்கள், செவிலியர்கள் என, 50க்கும் மேற்பட்ட விமானப்படை மருத்துவ குழுக்கள் இங்கு முகாமிட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை நடத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad