இதைத்தொடர்ந்து, புத்தக கண்காட்சி குறித்த முழு விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் `அறிவென்ற ஆயுதம் கொள்' என்ற குறுந்தகடு, மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் `நீயே ஒளி' என்ற இலட்சியினை, தனியார் துறையின் பங்களிப்புடன் நூலகங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் `நம்ம ஊரு நம்ம நூலகம்' என்ற இலட்சியினை, குழந்தைகளிடையே புத்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்கு தேவையான தொகையினை சேமிப்பதற்காகவும் `எங்கள் உண்டியல் எங்க புத்தகம்' என்ற இலட்சியினை ஆகியவற்றை மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் முன்னிலையில் வெளியிட்டு, `எங்கள் உண்டியல் எங்க புத்தகம்' என்ற திட்டத்தினை துவங்கி வைக்கும் விதமாக 10 குழந்தைகளுக்கு உண்டியல்களை வழங்கினார்.
மேலும் `சுவாசிக்காவிட்டாலும் வாசியுங்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், உயிர்த்தமிழ் என்ற தலைப்பில் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில் எஸ்பி வருண்குமார், ஆட்சியர் (பயிற்சி) மகாபாரதி, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், டிஜெ.எஸ்.கல்வி குழும இயக்குநர் டி.ஜெ.ஜி.தமிழரசன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க துணை தலைவர் மயிலவேலன், செயலாளர் முருகன் மற்றம் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment