டாக்டர் இராதா கிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் கு.கலைவாணி வெளியிட்ட அறிக்கையில், காலாண்டுதேர்வு விடுமுறைஆனது அனைத்து மாணவர்கள் மத்தியிலும் ஒருபெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த குழப்பத்தை மீட்டெடுக்கும் விதமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 9 நாட்கள் விடுமுறை அளித்தது மன அழுத்தத்தில் இருந்த மாணவர்களுக்கு. புத்துணர்ச்சியையும்.
மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. என்றுமே தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை கொண்டு மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நல் உள்ளத்தை கொண்ட நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விடுமுறையை அறிவித்திருக்கின்றார் . இதனை பாராட்டும் விதமாக டாக்டர் இராதா கிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் என்ற முறையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்.
மதிப்புமிகு கல்வித்துறை துறை அமைச்சர் அவர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment