ஊத்துக்கோட்டை அருகே சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2023

ஊத்துக்கோட்டை அருகே சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் கிராமத்தில் தனியார் மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா எல்லாபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி தலைமையில் நடைபெற்றது. 


இந்த விழாவில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழா பேருரையாற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா திட்டம் சார்ந்த சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத், ஊத்துக்கோட்டை பேரூராட்சி நகர செயலாளர் அபிராமி குமரவேல், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா சசிதரன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad