இந்நிலையில், இன்று காலை உதயகுமார் காய்கறி வியாபாரம் செய்ய வெளியே சென்று விட்டார். இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் மாலதி வீட்டில் தனியாக இருந்தார்.இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிய வண்ணம், ரெயின் கோட் அணிந்து கொண்டு வீட்டின் மாடி வழியாக வீட்டின் உள்ளே இறங்கி வந்து உள்ளார்.
பின்னர், தனியாக இருந்த மாலதியின் கழுத்தில் இருந்த தங்கச் செயின், கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறிக்க முயன்றார். ஆனால், மாலதி நகைகளை கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர் இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் வெட்டினாராம். ரத்தம் சொட்ட, சொட்ட மர்ம நபரிடம் போராடிய மாலதியிடம் இருந்து மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பிடுங்கி உள்ளார்.

பின்னர், பீரோ சாவியை கேட்டுள்ளார். பீரோ சாவியை தராமல் இளம் பெண் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வர முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அந்த வாலிபர் மாலதியின் கால்களை கத்தியால் வெற்றியுள்ளார். இதனால் ரத்தம் சொட்ட,சொட்ட இளம் பெண் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டுள்ளார். இதற்குள் மர்ம நபர் பீரோவை திறந்து அதிலிருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு மாடிப்படி வழியாக ஏறி வெளியே சென்றார்.
பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மாலதியின் கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நடந்தவற்றை இளம் பெண் கூறிவிட்டு மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சாரதி வந்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டார்.
எவ்வளவு? நகைகள் கொள்ளை போனது. ரொக்கப் பணம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment