
இன்று நாடு முழுவதும் 74 வது குடியரசு தின விழா கொண்டாடி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பபேர் கிராமத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான டாக்டர் செல்வி ஏ.இளவரசி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி ஏழை பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களான பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் இனிப்பு உடன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், வழக்கறிஞர் கன்னியப்பன் மற்றும் நிர்வாகிகள் மல்லிகா, சிராஜ், தினகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment