திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ள பெரிய களக்காட்டூர் ஊராட்சியில் அடங்கிய சின்னக்களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வரும் திரு. கார்த்திகேயன் திருமதி பவானி அவர்களின் மூத்த மகள் காயத்ரி சென்னை மாநிலக் கல்லூரி முதுகலை எம் ஏ பொது நிர்வாகம் பப்ளிக் அட்மிஷன் துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி செல்வி காயத்ரி அவர்கள் சிலம்பத்தில் மாநில அளவில் பல போட்டிகளை கலந்துகொண்டு பரிசுகளை பெற்றிருக்கிறார்.

தற்போது கோவா மாநிலத்தில் 05.11.2022 முதல் 07.11.2022 வரை மூன்று நாள் தேசிய நேஷனல் லெவல் சிலம்பம் போட்டியில் 19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார் வெள்ளிப் பதக்கம் பெற்றதன் மூலம் சர்வதேச அளவில் இன்டர்நேஷனல் விளையாட்டு தேர்வு செய்யப்பட்டு இருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களுக்கு 2023 ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள காயத்திரி அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது விமானம், பாஸ்போர்ட் பயண கட்டணம், போட்டியில் கலந்து கொள்ள நிறுவு கட்டணம் மற்றும் உணவு ஆகிய உதவிகள் தேவைப்படுகிறது, இதற்கு உதவுமாறு அவர்கள் பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment