திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 2,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட, 12 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி சுகாதார மாவட்டங்களில், 67 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.கடுமையாக பாதிப்புதற்போது, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் 'ப்ளூ' காய்ச்சல் பாதிப்பால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மேற்கண்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளின் கூட்டம், சமீபமாக அதிகரித்துள்ளது.திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தினமும் 2,000 - 2,500 புறநோயாளிகள் வருகின்றனர்.
இதில், குழந்தைகள் நல பிரிவில், 200 - 250 பேர் வருகின்றனர். காய்ச்சல் காரணமாக, இதன் எண்ணிக்கை, 100 முதல் 150 வரை அதிகரித்து உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். பொன்னேரி அரசு மருத்துவமனை, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலும் வழக்கத்தைவிட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில், அது குறித்து காரணம் அறிந்து, சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அச்சப்பட தேவையில்லைஇது குறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும், 'ப்ளூ காய்ச்சல்' எனப்படும் வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். மூன்று ஆண்டுகள், கொரோனா தொற்று காரணமாக, இந்த காய்ச்சல் அதிகளவில் பரவவில்லை.
தற்போது, 'கொரோனா' தொற்று குறைந்து, குழந்தைகள் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லத் துவங்கி விட்டனர். குழந்தைகளை எளிதில் தாக்கும் இந்த வைரஸ் காய்ச்சல், பள்ளிக்கு செல்வதால் மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது. மேலும், வீடுகளில் பெற்றோருக்கும் வயதானோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த காய்ச்சல், நான்கு முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும். காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு கிடையாது என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வீட்டு மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கட்டுக்குள் காய்ச்சல், திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பு உள்ளன. ஏதாவது ஒரு பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு, ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட சுகாதார துறையினர்.
ஓய்வு அவசியம்காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஓய்வு அவசியம், ஆகவே, மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் குறைந்ததும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் திட உணவுகளையும், ரசம், மோர், கஞ்சி போன்ற திரவ உணவுகளையும், சத்தான உணவுகளையும் வழங்க வேண்டும்.பெரியோருக்கும் காய்ச்சல் பரவுவதால், அவர்களும் இதே உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment